சைக்கிள் பதிவுகள் 15- ஏகாந்தம் , ஒரு அரைப்புள்ளி இன்று திரும்பிப் பார்க்கும்போது இரண்டு வருடங்களுக்கு மேலாக சைக்கிள் குறிப்புகள் எழுதி வந்திருக்கிறேன். என்னுடைய எழுதும் பழக்கத்தை துவக்கி வைத்தது இந்த மிதிவண்டி. இந்த வார இறுதியில் வீடு மாற வேண்டியிருக்கிறது. அலுவலகம் இன்னும் தூரம் ஆகிறது, ஒரு பக்கம் 30 கிலோமீட்டர். ஆகவே சைக்கிளை நிறுத்த வேண்டியிருக்கிறது, வேறு வழி கண்டுபிடிக்கும் சில நாட்களுக்காகவாது. மிதிவண்டிக்கும் ஆறு வருடம் ஆகிவிட்டது. ஓய்வு கேட்கிறது என்று நினைக்கிறேன், சர்வீஸ் முடிந்து சில நாட்களில் பால்ரஸ் குண்டுகள் ஓடும் சத்தம் வர ஆரம்பிக்கிறது. வீடு மாறுவதில் எனக்குத் தோன்றும் இழப்பாகத் தெரிவது இந்த சைக்கிள் பயணமே. நம் வழியில் நாமாக சலனப் படாமல் போக முடிந்தது. பெரிய போட்டி ஒன்றும் இல்லை.நேரம் ஒரு ஐந்தோ பத்தோ நிமிடங்கள் அதிகம் ஆகலாம் , அவ்வளவே. பாடல்கள் கேட்கலாம், பதிகங்கள் கேட்கலாம், பேச்சுக்கள் கேட்கலாம். வேடிக்கை பார்க்கலாம். எல்லாமும் மேலே எதவாது உடற்பயிற்சி உடம்பை ஆட்டும் முயற்சி. என் பார்வையில் இது பெரிதல்ல. இது உடற்பயிற்சி என்பது சில நாட்கள் விட்டுச் செய்யும்பொ...