Creatine Monohydrate ---------------------------- ஒருவாரமாக creatine என்ற ஒரு பௌடரை நீரில் பத்து கிராம் போட்டுக் குடித்து வருகிறேன். ஒரு சில வாரமாய் புத்தகம் படிக்கையில் முன்னை விட வெளிச்சம் தேவை இருக்கிறது. வரவேற்பறையில் நாற்காலியில் அமர்ந்து வலது புறம் இருந்து வரும் அறை வாசல் வெளிச்சத்தில் முன்பெல்லாம் படிக்க முடியும். முன்னைவிட சற்று அதிகமாக கான்ட்ராஸ்ட் வைக்க வேண்டியிருக்கிறது. ஒரு காலத்தில் நான் ஜீரோ கான்ட்ராஸ்ட் வைத்து வேலை பார்ப்பது வழக்கம். பக்கத்தில் வந்து நின்றாலும் திரையைப் படிக்க முடியாது. இன்றைய அடைமழை மேகம் கவ்வியது போன்று இருக்கும். கண் இமை இரண்டும், எப்போதும் இல்லையென்றாலும் நாள்களில் சிலமுறை , பாரமாய் இருந்தது. மேலே தூக்கி வைத்தால் சிறு வலி. தசைகளை வலுக்கூட்டி உன்னிப்பாக பார்த்தால் வலி. அப்போது எழுத்துக்கள் தண்ணீர் தெளித்தது போல் ஆகி விடுகின்றன. கேரட்டுகள் குறைந்தது காரணம் என்று , அவைகளை அதிகம் சாப்பிட்டுப் பார்த்தேன். தலைகீழ் ஒரு சில நாள் நின்று பார்த்தேன். முன்பு பக்கத்தில் வைத்துப் படிக்க முடிந்த எழுத்துக்கள், இப்போது கண்ணை பின்னால் நிறுத்து என்கின்றன. கண...