Skip to main content

Posts

Showing posts from April, 2025

சில கவிதைகள்

அடியின் அட்டவணை சரியாக மாலை ஆறு முப்பது எதோ ஒரு குட்டை கவுன் பெண் யாராவது இரண்டு பழைய வீரர்கள் சொல்லும் நேற்று அடியைப் பார் போனைத் திற இன்ஸ்டாவைத் துளாவு பேஸ் புக் என்னவென்று பார் வாட்சப் பார் ஒருமுறை மணி ஏழு இரண்டு வயதானவர்கள் அதே குட்டை கவுன் பெண் இன்றைய அடிக்கான திட்டங்களைப் பார்   கொஞ்சம் ndtv நியூஸ் 18 இந்தியா டுடே எக்ஸ்பிரஸ் பார் சிறிது இவை வழி ட்விட்டர் சென்று முடியும் பொழுது திரும்பி வா இடையில் ஆணுறை விளம்பரம் வந்தால்  தலை நிமிர்ந்து பார்  சிறிது    மணி ஏழு முப்பது அடி அடி இன்னும் அடி ஐயோ...எத்தனை கோடி ஏன் அடியில்லை போன முறை இங்கிருந்தாரே  ஏன் அவர் அங்கே  அங்கிருந்த இவர்  ஏன் இங்கே மட்டும் இப்படி  அடி அடி இன்னும் அடி தரையில் விடாதே வானில் மட்டுமே விடு மணி ஒன்பது இருபது ஏன் அடிக்கு அடி ஏன் அடிக்கு அடி மௌனம் இல்லையா மௌனம் இல்லையா மணி பதினொன்று இவரா அவரா இதுவா அதுவா இன்னும் தெரியவில்லை மணி பதினொன்று பத்து கடைசியாய் அட்டவணையைப் பார் கீழிறங்கியது மேலேற வழி என்ன என்று பார் மறக்காமல் நாளை என்ன என்று பார். டிராபிக் சிக்னல் கவிதைகள் -1 இன...

Whip your brain

இன்று நான் மொழிபெயர்த்த மூளையை சாட்டையலடியுங்கள் என்ற கட்டுரை ஜெயமோகன் unified wisdom தளத்தில் வெளிவந்திருக்கிறது. மீண்டும் ஒரு முறை படித்தேன் , சரளமாகவே இருந்தது, ஒரு சில இடங்களில் இன்னும் நன்றாய் வந்திருக்கலாம் என்றும் தோன்றியது.  எனினும் உற்சாகமாய் இருந்தது. https://www.jeyamohan.in/214403/ https://unifiedwisdom.today/2219-whip-your-brain

குமிழி ஏறு வரிசை

அருணாச்சலம் அன்று காலை ஒரு அட்டைப் பெட்டிக்கு மேல் வைக்கப் பட்டிருந்த விசைப்பலகைக்கு அருகில் சம்மணமிட்டு கீழே அமர்ந்தான். எதிரில் கணிப்பொறியின் செவ்வக கோபுரம் கருப்பாய் நின்றது. அதனருகே அதன் ஒளித்திரை அவனை வாய் திறந்து விழுங்க வருவது போல் பிளந்து நின்றது. இல்லை நெஞ்சைப் பிளந்து என்னிடம் இன்னும் ஒன்றும் மிச்சம் இல்லை, எல்லாம் உன் கையில் என்று சொல்வது போல் இருந்தது. அதுவே வசை பாடி என்னைத் தொடாதே என்பது போலும் அவனுக்குத் தோன்றியது. அவன் செவ்வக கோபுரத்தில் இருந்த வட்டமான மின் பொறியை அழுத்தினான். இதையும் ஓங்கி அழுத்தக் கூடாது என்று உள்ளே இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் மனோகர் சொல்லியிருக்கிறான். ஆகவே எப்போதும் மெதுவாகவே அழுத்துவான். மேலும்அந்தக் கணிப்பொறி தன்னுடையதில்லை, அவனுடையது. KR மார்க்கெட்டில் ,துண்டுச் சீட்டில் காய் கறி , பலசரக்கு  பெயர்கள் போல் கணிப்பொறிக்கு வேண்டிய சாமான்கள், மதர் போர்டு , சி பி யூ , காற்றாடி , கோபுரம் எல்லாம் எழுதி வாங்கி வந்து அவனே அசெம்பிள் செய்தது. CD பிளேயர் , யமஹா சவுண்ட் கார்டு உள்பட தன் கையால் செய்து வைத்திருக்கிறான். சொன்னால் கேட்காமல் இருக்க முடியுமா?...

"பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை" - திருப்பதி பயணக் குறிப்புகள் -2

"பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை" - திருப்பதி பயணக் குறிப்புகள் -2 தமிழ் இலக்கியத்தில் திருமலை பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் இருக்கிறது. பின்னர் சங்கப் பாடல்களிலும் ஒரு சில குறிப்புகள் வருகின்றன.இதன் பின்னர் சிலப்பதிகாரத்தில் திருவேங்கடத்தை சுட்டும் பாடல் வரிகள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் ஒருவர் தவிர மற்ற எல்லோரும் பாடியிருக்கிறார்கள். மொத்தம் 204 பாசுரங்கள். திருவரங்கத்தை அடுத்து பாடல் எண்ணிக்கையில்  இரண்டாவது. கம்பரும் வேங்கடத்தானை குறித்திருக்கிறார். சிலப்பதிகாரத்தில் மூவரும் (கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள்) மதுரை நோக்கி வரும்போது உறையூரில் தங்கி மதுரைக்கு வழி கேட்க, வழி சொல்பவர் குறிப்பதாக திருமலை வருகிறது. மதுரைக் காண்டம், காடு காண் காதை, வழி சொல்பவன் மாங்காட்டு மறையோன். இது இரண்டாம் நூற்றாண்டுக் குறிப்பு. கம்பராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்தில், நாடவிட்ட படலத்தில் திருமலையைப் பற்றிய சான்றுகள் வருகின்றன. இதுவும் சுக்ரீவன் சீதையைத்  தேடிச் செல்லவேண்டிய இடங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. கம்பராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டு எழுதப் பட்டது. சிலப்பதிகாரத...

ஓர் அம்மா, ஓர் பையன் , ஒரு ரோபோட்

நடு ராத்திரி 02.45. அவனும் அம்மாவும் தூங்கி சில மணிகளே இருக்கும்.  எட்டு ஒன்பது மணி கார் ஓட்டி வந்த  களைப்பு. அம்மாவுக்கு கீழே மதுரையில் (சின்னதாய்) விழுந்து, முதுகுத் தண்டு டாக்டரைப்  பார்த்து, பெரும்பாலும் ஓய்வில் இருக்கச் சொல்லி, இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கமாய் சிதறிப் போய் இருப்பதனால், கட்டுப்படியான மதுரை வாசத்திற்குப் பின், வடக்கே பிள்ளைகள் இருக்கும் இடம் வந்து, ஓரளவு தெம்பு வந்தவுடன், வலுக்கட்டாயமாய்த் திரும்பிச் சென்று, அன்று சென்று சேர்ந்தவுடன், கொண்டு போன இட்டிலியை சாப்பிட்டு உறங்கி உறங்காமல் நள்ளிரவு 0245 பதறி தானும் எழுந்து, பையனையும் எழுப்பவேண்டும் என்றால் எப்படி இருக்கும்.  ஒன்று எதாவது திரும்ப விழுந்திருக்க வேண்டும், இல்லை கெட்ட கனவு , இல்லை  அதனினும் மேலாக எதாவது .... ' டே சுந்தர் .. கொஞ்சம் எழுந்திரிப்பா...முடிஞ்சா நானே எழுந்துற மாட்டேனா? ' அவர் எழுப்பும் அந்தப் பையனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அவர் அப்போது வேறு கனவுகள் கண்டுகொண்டிருந்தார். டொனால்ட் டிரம்பும் , இலான் மஸ்கும் சேர்ந்து கழுத்தில் ஒருவர், வயிற...

"பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை" - திருப்பதி பயணக் குறிப்புகள் -1

எல்லாமும் ரொம்ப ஈசியாக நடந்துகொண்டிருப்பது போல் இருந்தது. வேலைவிட்டு வந்து சரியாக மாலை ஏழு மணிக்கு டாக்ஸி ஒரே முயற்சியில் புக் ஆனது. அந்தப்பையன் புது வண்டியை (ஓனர்) ஒட்டிக்கொண்டு வந்தார். அவரே பஸ் வரும் இடத்தை அறிந்திருந்தார். வாழ்வாங்கு வாழட்டும். அப்பாவும் டிரைவராக ஊரில் இருக்க வேண்டும். போனில் இங்கிருந்து வழி சொல்லிக்கொண்டிருந்தார். தெலுங்கு தான் அவருக்கு வந்தது. நமக்கு தெலுங்கும் வராது. எதோ மைலேஜ் , CNG, டிராபிக்  போன்ற உதிரி வார்த்தைகளாய் போய்ச் இறங்கியதும் பஸ் சரியாக 8:50 என்ற குறித்த நேரத்திற்கு வந்தது. போன வாரம் திருப்பதிக்கு டிக்கெட் எடுக்கும் போதும் ஒரே நொடியில் நான்கு பேருக்கும் புக் ஆனது. ஒரு சிலரிடம் பேசி இதெல்லாம் சரியாகப் போகிறதா என்று விசாரித்தேன். சரிதான் என்றார்கள் பெரும்பாலும். டிக்கெட்டில் அடைப்புக்குறியில் பிரீ தர்ஷன் என்று இருந்தது. முன்னப் பின்ன சென்றால் தானே தெரியும், இதற்க்கு இன்னும் விளக்கம் பின்னால் வருகிறது. கடைசி நிமிடத்தில் ஆரம்பித்ததிலும் இவ்வளவு நேர்த்தியாய் எல்லாம் நடந்து கொண்டிருப்பது தான் நான் சந்தேகப்பட்டது. வோல்வோ வண்டி அலுங்காமல் சென்றது. அசோகம...

சுவை

இந்த நாள்களில், அவனுடைய நடு வயதில் , சாப்பாட்டுத் தட்டில் கை வைத்து கூட்டு, காய்களை ஒரு முறை இழுத்துப் போட்டு சோற்றுடன் பிசைந்து உண்ணும் போது, மொத்தமாய் எல்லாவற்றையும் முதலிலியே ஒரே கலவையாய்ச்  செய்தால் என்ன என்று  தோன்றுகிறது. பார்க்க எப்படி இருக்கும் என்று தெரியாது. அவனுடைய சிறுவயதில் அவரை அம்மாக்கள் பூச்சாண்டி என்பார்கள். சிலர் ஜோல்னாப் பை சாமி என்பார்கள். கன்னங்கரேல் என்ற முகம். எல்லாம் வெளுத்த தலை, வெள்ளைக் குறுந்தாடி. வயது அன்று அறுபத்தைந்து எழுபது இருந்திருக்க வேண்டும். தோலில்  சுருக்கம் இருக்காது. தமிழ், தெலுங்கு இரு மொழிகள் பேசுவார்.  காவி வேட்டி அணிந்திருப்பார். இதை முக்கா வேட்டி என்பார்கள். துண்டும் இல்லை, வேட்டியும் இல்லை. ஒரு பக்கம் ஏற்றி மறுபக்கம் இறக்கி கட்டி இருப்பார். கையில் ஒரு நீளமான, அவர் கை பட்டே வழுத்துப் போய் பளபளக்கும் ஒரு தடி. இது இவர் தலைக்கு மேல் இருக்கும். என்றாவது இதை மூன்றாய் வெட்டி ஸ்டம்புகளாக ஆக்க முடியாதா என நினைத்திருக்கிறான். வலது தோளில் ஒரு சிறு காவி மூட்டை. இது அவரது இரண்டாவது வேட்டியும் கூட. படுக்கும் போது தலையணை. காலில் டயர...

யாருக்கு நன்றி தெரிவிப்பது ?

யாருக்கு நன்றி தெரிவிப்பது ? நேற்று பெய்த இந்த வருட முதல் மழையில் ஊரெல்லாம் நான் கீழே குறிப்பிட மறந்த கோரமங்களா அகரா சாலையில் உள்ளே நுழையும் போது , ஒரு தர்பூசணி தள்ளுவண்டிக்காரர் , என்னைப்  போகாமல் தடுத்தார். எட்டிப் பார்த்தால் இவர்கள் பதிக்க வேண்டிய குழாய்களெல்லாம் தரை மேலிருக்க, மழை நீர் பள்ளத்தை நிறைத்து , ரோட்டில் திகைத்து நின்றது. வண்டிக்காரர் ஏன் சொன்னார் என்று விளங்கியது. ஊரெல்லாம் சுற்றி ஒன்றிற்கு இரண்டு புனேரி டீயை குடித்து வீடு வந்து சேர்ந்தேன். இதை நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தேன். இந்தக் குமுறலை தகுதி  உயர்த்தி இங்கே பிரசுரித்தால் இதமாக இருக்கும் என்று தோன்றியது. யாருக்கு நன்றி தெரிவிப்பது என்ற தலைப்பு, அசோகமித்திரனின் கதை. கதையைப்  படித்துமுடித்தவுடன் மறக்கவே மறக்காது. வாழ்வில் எல்லாவற்றுக்கும் அட்ஜஸ்ட் செய்து கொள்வதே வேலையாகிவிட்டது. நாம் வண்டிகள் ஓட்டும், நடக்கும் சாலைகளுக்குக் கீழே என்னவெல்லாம் போட்டு புதைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு பெரும் வியப்பாய் இருக்கிறது. கால் கீழே  சாக்கடை , ரோட்டின் ஓரமோ , பாதியிலோ , நடுவிலோ, ஒரு பக்கம் மட்டுமோ , இ...

உள்ளேயும் வெளியேயும் தாழிடுதல்

உள்ளேயும் வெளியேயும் தாழிடுதல் 2001 செப்டம்பர் 11 அன்று இரட்டை விமானத் தாக்குதல் உலக வர்த்தக மையத்தில் நடந்தபோது நான் பெங்களூரில் (பச்சிளம் பாலகனாக) இருந்தேன். அன்று வேலை முடித்து வந்தவுடன் ஒரு விமானம் மாபெரும் கட்டிடத்திற்குள் புகுந்து சாம்பல் கிளம்புவதையும், கட்டிடம் சரிந்து விழுவதையும் ஒரு ஆயிரம் முறை காட்டினார்கள். நண்பர்கள் சேர்ந்து இரவு நீள TV பார்த்த ஞாபகம் இருக்கிறது.புஷ் வந்து ஆவேசமாகப் பேசினார். அவரை விடுமுறையில் இருந்து கூட்டிக் கொண்டுவந்தனர். போர் வரும் என்றனர், பொருளாதாரத் தடைகள் வரும், பொருளாதாரம் பின் தங்கும் , வேலைகள் போகும் என்று பேசிக்கொண்டார்கள் செய்தி வாசிப்பவர்கள். எப்படியோ அது கடந்து போனது. நேற்று டிரம்ப் இந்த மாதிரி ஒட்டுமொத்த பொருளாதார உலகத்தில் ஒரு விமானத்தை மோதியிருக்கிறார். முன்னவர் மோதியவர்களை துரத்தினார். இங்கு மோதியவர் , அவரே தான். யாரை விரட்டுவது ? விடுமுறையில் கோல்ப் விளையாடுகிறார் என்று சொல்கிறார்கள். இது ஒரு விளையாட்டாக இருந்தால் பரவாயில்லை. இல்லையென்றால் சிக்கல் தான் என நினைக்கிறேன். 1991-ல் மன்மோகன் சிங் இந்தியப் பொருளாதாரத்தை திறந்தார். நான் இந்த ப...