ஒரு வேலை நடக்க வேண்டுமானால் பொறுமை அவசியம். உள்நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்த பின் சடை விழுந்து, உடல் சுற்றி புற்றுகள் எழ , பாம்புகள் பூச்சிகள் ஊற ஐந்து எழுத்தோ, ஏழு எழுத்தோ சொல்லிச் செய்யும் தவம் ஒரு வகை. இதற்கு இறைவனும் இறங்கி வந்திருக்கிறார். இன்றைய உலகியலில் இதற்க்கு பெயர் விடா முயற்சி. இசையமைப்பாளர் ஸ்ரீதர் ஜோஷ்வா(காதல்/கல்லூரி புகழ் ) வாழ்வில் தான் இசையமைக்கவே விரும்பியதாகவும், தினமும் இளையராஜா வீட்டின் முன் சென்று காலை முதல் மாலை வரை பல நாள்கள் நின்றிருப்பதாகவும், இறுதியில் ஒருநாள் கார்த்திக் ராஜா இறங்கி வந்ததாகச் சொல்லியிருக்கிறார். வெளி உலகில் இவ்வளவு தூக்கலாக இருக்கும் இதை வீட்டினுள் நன்றாகச் செய்பவர் என் பையன். இவருக்கு ஒரு தனி உத்தி இருக்கிறது. படிப்படியாக பொறுமையாக இழைப்பது. ஆசாரிகள் இதை இழைத்தல் , ராவுதல், கடைதல் என்பார்கள். ஒரு முழு நீள நிலப்படியே என்றாலும், ஆசாரி, சிறு பிள்ளைகள் கார் ஓட்டுவது போல் , சிலமுறை ராவினால், சுருள் சுருளாய் தோல் வெளியே வந்து கட்டை இளைக்கும், இல்லையா?. என்றோ குற்றவுணர்ச்சியில் நான் வாங்கி வைத்திருக்கும் 2x6 கிலோ ...