கவனித்தலின் அடிப்படைகள்: ( https://www.jeyamohan.in/203824/ ) இது ஒரே ஒருமுறை மேற்கண்ட காணொளியை கண்டு, அதை என்னால் கவனிக்க முடிந்ததா என்று சந்தேகத்தில், செய்த சுயபரிசோதனை. பதினைந்து நிமிடம் தான் ஆனாலும் சிறு முயற்சி. எது கவனித்தல் இல்லை? சொல்பவர் சொல்வதை கேட்டு அதிலிருந்து நாம் புரிந்துகொண்டதை சுருக்கிச் சொல்வது கவனித்தல் ஆகாது. நீங்கள் புரிந்துகொண்டது சொன்னவர் சொல் கிடையாது. அதற்க்கு அவர் பொறுப்பேற்க முடியாது. பெரும்பாலும் கவனித்தல் என்று சொல்லப்படுவது இதுவே. ஆனால் இது கவனித்தல் ஆகாது. இரண்டாயிரம் வருடங்களை வேதாந்த குருமரபுகளில் சொல்லப்படும் கவனித்தல் வேறு. இந்தப் பிழையை சுட்டிக்காட்ட நித்யாவின் குருகுலத்தில் ஒரு முறை அசைந்து உட்காரும் போது தனக்கு நிகழ்ந்த அனுபவத்தை விளக்குகிறார். நித்யா ஜேயை அவர் பாடம் கவனிக்கவில்லை என்கிறார். இவர் கவனித்தேன் என்கிறார். பின்னர் சொல்லக் சொல்கிறார். இவர் அவர் சொன்னதை சுருக்கித் தான் எடுத்துக் கொண்டதைச் சொல்கிறார். குரு இதுவல்ல தான் சொன்னது என்கிறார். சாராம்சத்தை மட்டும் சொல்ல வேண்டும் என்றால் அவரே சொல்லியிருக்க மாட்டாரா? தான் ஏன் இவ்வளவு சொல்ல வேண...