Skip to main content

Posts

Showing posts from December, 2024

சைக்கிள் பதிவுகள்- 13 - டிசம்பர் 31

சைக்கிள் பதிவுகள் - டிசம்பர் 31 வீட்டுக்கும் அலுவலகத்திற்குமான பதினைந்து கிலோமீட்டர்களை , மூன்று ஐந்தாக பிரித்துக் வீட்டுக்கும் அலுவலகத்திற்குமான பதினைந்து கிலோமீட்டர்களை , மூன்று ஐந்தாக பிரித்துக் கொண்டால் மனத்தை பிடியில் வைக்கலாம். முதல் ஐந்து முடிந்ததும் ஒரு தேநீர், இது மனதிற்கு கேரட்.  இரண்டாவது ஐந்தின் முடிவில் நிறுத்தி  உண்மையான கேரட் வாங்குவது  , இது உடலுக்கு என நினைத்துக் கொள்கிறேன். மூன்றாவதில் முடிவில் முகத்தைக் கழுவி மீண்டும் ஒரு கோப்பை  காபி. இன்று டிசம்பர் 31.  இப்போது மின்னஞ்சல்களை நுண்ணறிவு செயலி வழியாக வடிகட்டி வைத்திருக்கிறேன். கடந்த ஒரு சில நாட்களாக , செயலாய் வரும் மின்னஞ்சல்கள் நாளில் ஒரு சில மட்டுமே வருகின்றன. இதற்கு மேல் பெரிய மெயில்களை அதுவே வாசித்து ஓரிரு வரிகளில் சுருக்கித் தருகிறது. இதற்க்கு நீங்கள்  ஒரு பதில் மெயில் அனுப்பினால் , சருகாய் திரும்பி அவுட் ஆப் ஆபீஸ் மெயில்களை கூட்டி  அள்ள வேண்டியிருக்கிறது. எதிர்காற்று என்பார்கள், டிசம்பர் 31 என்பதும் அதுதான் .  காலையில் வார இறுதிக் கூடுகைக்காக கிளி சொன்ன கதை முதல் அத்தி...

சைக்கிள் பதிவுகள் 12- Breath, James Nestor , மூச்சைப் பற்றி...

சைக்கிள் பதிவுகள் 12-  Breath, James Nestor , மூச்சைப் பற்றி...  நாம் நினைத்துப் பார்க்க முடியாத சிறிய விஷயங்களையும் வியக்கும் அளவு பெரிதாக்கிச் செய்யும் கலை வெளி நாட்டவர்களுக்கு எப்படியோ உடம்பில் ஊறி இருக்கிறது. என்றோ ஒரு நாள் வியந்து, பின்னர் அதைப்போலத்தான் இது என்று அடுக்கி , அதற்குப் பெயர் கண்டு பிடித்து  மிகச்சாதாரணமாக  கடந்து செல்லும் விஷயம்தான் இதுவும். உதாரணமாக இப்போது இங்கு பிராணாயாமம் என்று ஒரு வார்த்தை எழுதினால், அடுத்த நொடி  நீங்களும் இதை ஒரு முழு நீள ஸ்குரோல் செய்து கீழே முட்டியதும் மூடி வைத்துவிட்டுப் போகலாம். ஏனென்றால் அதிலிருக்கும் வியப்பைப்  பிதுக்கி எப்போதோ வெளியில் எடுத்தாயிற்று.  சில வருடங்களுக்கு முன் முதலில் ஒருவர் மூச்சை வைத்து பிழைப்பை நடத்துகிறார் என்பது எனக்கு பெரிய ஆச்சரியமாய் இருந்தது. இந்தப் புத்தகத்தை வாசித்ததும் மீண்டும் அந்தக் கம்பெனி இருக்கிறதா என்று தேடினேன். அமோகமாய் இருக்கிறது. அவரும் ஒரு புத்தகம் எழுதிவிட்டார். அண்ட்ராய்டு , ஐபோன் ஆப் இருக்கிறது. பேட்ரிக் மெக்கேன் , Oxygen Advantage என்பது அவருடைய நிறுவனத்தின் பெயர்...

சைக்கிள் பதிவுகள் - 10- கார்காலப் படலம்

கார்காலப் படலம்  கொஞ்சம் பழைய வீடாய் இருந்தால் பாத்ரூம் கதவை கொஞ்சம் ஓங்கி மூடினால், வெளிக்கதவு  தானாக திறப்பதை  நீங்கள் பார்த்திருக்கலாம். மெட்ரோ ரயில் நிறுத்தத்தில் வண்டி நிற்கும் முன், அதைவிட முன்னே  வரும் ஒரு வலுத்த குளிர் காற்றைப்போல. ரியர் என்ஜின் வோல்வோ வண்டிகளில் டிரைவர் பிரேக்கை அழுத்தியதும் , நங்கூரம் பாச்சிய கப்பல் போல, முழுதும் முன்னாலே போய் , பின் அந்தக்கணமே பின்னால் வந்து , கீழே உள்ள தூசியெல்லாம் எல்லாம் சுழற்றி நம் மேல் அடிப்பதைப் போல. இதேபோலத்தான் வங்கமோ , அரேபியாவோ, இல்லை இரண்டும் சேர்ந்து இந்தியப் மகா சமுத்திரத்தில் வந்தாலும் அந்தப் புயல், காற்றழுத்தம்   , பெங்களூரில் தெரியாமல் போகாது. மூன்று நாள் முடிந்து இன்று நாலாவது, வெய்யில் இன்னும் இல்லை.  மழையை விட மழை என்னும் குரல்கள் எங்கும் அடை மழையாய்ப் பொழிகின்றன. ரோடு ,தெரு, வீடுகள், எல்லாம் வார்த்தைகளாய்ப் புகுந்து , நிழலாய் கூடவே இருக்கின்றன.  எல்லா செயல்களும் , திரை விலக்கி ஒரு வெளிச்சத்தில் பார்ப்பது போல, மழை மேல் உரசிப் பார்க்கப்படுகின்றன. ஒரு கரகரப்பான குரல் , எங்கோ ஒரு சிறு இருமல்,...