Skip to main content

Posts

Showing posts from November, 2024

ஒரு ஸ்டம்ப் சிக்கியது

ஒரு ஸ்டம்ப் சிக்கியது ஒரு ஸ்டம்ப் சிக்கியது   நேற்று முன்தினம் இரவு சரியாக மூன்று  மணி நேரம் முழு நெட்ஒர்க் இல்லாத ஒரு வருட முடிவு கொண்டாட்டத்தில் இருக்கும் போது அம்மா கால் தவறி கீழே விழுந்து ஆளாளுக்கு தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார்கள். நானாய் திரும்ப அழைக்கும் போது அருகிலிந்தவர்கள் ஆம்புலன்ஸில் கூட்டிச்சென்று திரும்ப வீட்டில் விட்டிருந்தார்கள். கடவுள் செயலால் பெரிதாய் ஒன்றும் இல்லை. இது இப்படி இருக்கும் போது அடுத்த நாள் கடையில் இருந்தபோது A/C யில் ஏன் நெற்றியில் வேர்க்கிறது என்று கடைப்பெண் கேட்பதாக மனைவி கேட்டார்.  ஜெயமோகன் தளத்தில் நான் எழுதியது வந்திருப்பதாகச்  சொன்னார்கள், அதைத்தான் படித்துக் கொண்டிருந்தேன். திரும்பிப் படிக்கும்போதும் நன்றாய் இருப்பதாகவே நினைத்தேன். https://unifiedwisdom.guru/200415 https://www.jeyamohan.in/208506/ கிரிக்கெட்டில் ஜெயித்த வேகத்தில் ஸ்டம்புகளை ஆளுக்கொன்றாய் உருவி எடுத்துச் செல்வார்கள். ஒரு ஸ்டம்பு கையில் கிடைத்தது இன்று.

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க ! கடந்த வார இறுதியில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்  மணிக்கணக்காய் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்த்தேன். வெள்ளிக்கிழமை பார்த்ததும் துணி கிழிவது தெரிந்துவிட்டது. வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். மீண்டும் மதியம் மூன்று மணி அளவில் ஆஸ்திரேலியா நுனியில் தொங்கிக்கொண்டிருந்தது.  இது இரண்டுக்கும் இடைவெளியில் பண்டிட்டுகள் ட்வீட் விட ஆரம்பித்தார்கள். பும்ரா முதலில் கிழிந்தார். ஒரு கேப்டன்  முன்பொருமுறை மைக்குக்கு முன் வந்து டீமில் யார் உள்ளே யார்  வெளியே என்று சொல்லுமிடத்தில் பெயர் மறந்து போய் , கால்ச்சட்டைப் பையில் இருந்து பேப்பரை உருவி , பெயரைச் சொன்னார். இதை அசட்டை என்று சொல்லலாம். IPL டீமில் கேப்டன்களுக்கு எல்லார் பெயரும் தெரிய நியாயம் இல்லை. ஒரு ஊரே டீமில் இருக்கும்போது என்ன செய்ய முடியும். இதைப் போல் மறந்து போய் பும்ரா பேட்டிங் எடுத்து விட்டாரா தெரிய வில்லை. கடைசி நேரத்தில் வார்த்தை மாறி வந்து விழுந்து விட்டதா? வண்டி பழகிக்கொண்டு இருக்கும் போது ' ரோட்ல , டிவைடர் இருக்கு பாத்து'என்பார்கள் . நாம் அறியாமல் நம் வண்டி அங்கேயே செல்லும். சிலர் அதை ம...

கோயிலுக்காக ஒரு பயணம்

கோயிலுக்காக ஒரு பயணம் ஜெயக்குமார் அவர்களின் அடுத்த வகுப்பு அறிவிப்பு வந்ததும், ஒரு நண்பரையும் (உடன் படித்தவர்) உடனே பெயர் பதிவு செய்துவிட்டேன். இது மூன்றுநாள் வகுப்பு, முந்தைய நாள் பயணம் சேர்த்து நான்கு நாட்கள்.  அடுத்த சிக்கல் என்னவென்றால் அக்கம் பக்கம் என்ன சொல்லிவிட்டுச் செல்வது.  எங்காவது இமயமலைப் பக்கம் ஷேத்ராடனம் போல் இருந்தால், சொல்லிக்கொண்டு போவது எளிது. அண்மையில் நீம் கரோலி பாபா பார்க்க என்று சொல்லிவிட்டு ஒருவர் அமெரிக்காவிலிருந்து வந்ததாகச் சொன்னார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் , மார்க் ஸுக்கர்பர்க் இருவரையும் கூடச் சேர்த்தால் ஒர்க் அவுட் ஆகிவிடும். ஆனால் இது வெள்ளிமலை. ஒருவர் ஜெயமோகன் , மற்றொருவர் ஜெயக்குமார். அண்ணன் தம்பியா , இல்ல அப்பா புள்ளையா என்ற ஒரு கேள்வி வந்தது.  ஒரு கோயிற்கலைக்கென்று  ஒரு  செமினார் என்று ஒரு சிலரிடம் சொன்னேன்.முகங்கள் நிமிர்ந்தன , விழிகள் அகன்றன, முகக் கண்ணாடிகள் கழன்று கையில் வந்தன. முடிவில் 'சாமி கும்புடறதா , இல்ல ?'  'இல்ல , இது எப்படி கும்புடுறதுனு சொல்லிகொடுக்கற ஒரு வகுப்பு'.  டெம்பிள் ஆர்ட் என்று சொல்லிப்பார்த்தேன். ஹாபி...

பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 5 - நூல் அமைப்பு

பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 5 -  நூல் அமைப்பு  கீதையில் 18 அத்தியாயங்கள். இதில் ஒரு கட்டமைப்பு உள்ளது என்று இதற்க்கு உரை எழுதிய எல்லா முக்கியமான ஆசிரியர்களும் சொல்லியிருக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளவது நூலைப் புரிந்துகொள்வதற்கு மிக அவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள். கீழே வருவது சித்பவானந்தர், நித்ய சைதன்ய யதி, குரு முனி பிரசாத் மற்றும் அவர் வழி வந்தவர்களின் உரைகளில் படித்தது. சித்பவானந்தர் கீதை சொல்வதை ஞானயோகம் , பக்தியோகம் , கர்மயோகம்  என்ற மூன்றாய் வகுக்கலாம் என்கிறார். கீதை பறவை என்றால் ஞானயோகமும் பக்தியோகமும் அதன் இரு சிறகுகள். பறப்பதற்கு சிறகு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதன் வாலும் ஆகும். ஒரு பட்டத்தின் வாலும் , கயிறும் போல. பறவையின் வாலே அதை நிலையாய் விண்ணில் பறக்க வைக்கிறது. அதன் பறக்கும் திசை அதை நம்பியே இருக்கிறது. ஞானமும், பக்தியும் சிறகுகளென்றால் , கர்மயோகமே அதன் வால். உலகில் ஆற்றும் செயலே கீதை என்ற பறவையின் வாலென்றாகும். எந்த ஒரு இடத்திலும் செயலை நிறுத்து என்று கீதை சொல்லவில்லை. யோகநிலையில் இருந்து தீவிரமாக செயலாற்றவே சொல்கிறது. இகத்துக்கும...

பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 4 - கீதையின் Genre

இளவயதில் சரஸ்வதி பூஜைக்கு எடுத்து அடுக்கிய புத்தகங்களில் தவறாமல் சித்பவானந்தர் எழுதிய கீதையும் இருக்கும். ஒரு நாள் முழுதும் எதுவும் படிக்காமல் இருக்க வேண்டும். படிக்கும் பிராயத்தில் வாழ்க்கையில் ஒரு நாள் எவ்வளவு மதிப்புடையது என்பது தெரியும், தவறவிட்ட நாட்கள் அவைகள்...இப்படி எழுதலாம். படிக்காமல் இருந்த எவ்வளவோ நாட்களில் இதுவும் ஒன்று. அங்கீகாரம் பெற்றது அவ்வளவுதான்.   அப்பா 'புத்தகத்தை திறந்து உட்காரமாட்டேங்காணே' என்று மட்டும் தான் சொல்வார். நானும் புத்தகத்தை மடியில் கிடத்தி , கீழ்த் திண்ணையில் உட்கார்ந்து விடுவேன். எங்கோ போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் இன்னும் விளக்கியே ஆக வேண்டும். நாங்கள் வாழ்ந்த தெருவின் எல்லா வீடுகளிலும் பெரிய திண்ணைகள் இருக்கும். ஒரு ஐந்து ஆறு மாமாக்கள்  பெரிய வட்டமாய் அமர்ந்து மூன்று கட்டு  ரம்மி விளையாடுவார்கள். ஒருவர் எண்ணிக்கை எழுதுவார். அக்காக்கள் மனைவிகள் மேல்திண்ணையில் இருந்து வந்தும் போயும் பார்த்து , மனதிற்குள் வைவார்கள். ஏனென்றால் இது நாள் பூராம் நடக்கும். மொத்தம் 320 எண்ணிக்கை ஆட்டத்தில் இருந்து வெளியேற. பல மாமாக்கள் 'ஸ்க்ரூட்' என்று சொல...