மறுபடியும் இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கடந்த சில மாதங்களில் திரும்பவும் வந்தபடியே இருந்தது. வார இறுதி நாட்களில் கணினி திறப்பதை அறவே நிறுத்திப் பார்த்தேன். குறுஞ்செய்திகள் குறிப்பிட்ட ஒருவரிடம் இருந்து வருவது தெரிந்து , செயலியை திறப்பதையே குறைத்தேன். இருந்தும் எல்லாம் இருபுறமும் குமுறி நெருங்கியபடியே வருவது தெரிந்தது. மேலே கேட்டால் சொல்வதற்காக, என் பக்கத்தை கோர்வையாக சில பக்கங்கள் கோர்வையாக எழுதி வைத்தேன். அவருடன் வரப்போகும் மீட்டிங்குகளுக்கு என இரவெல்லாம் கத்தியை கூர் தீட்டியவாறு முழித்து இருந்திருக்கிறேன். கூடே வேலை பார்ப்பவர்களை என் முனைக்கு தயார் செய்ய நெருக்கடியில் செலுத்தியிருக்கிறேன். அன்று அப்படி சனி ஞாயிறு இரண்டு நாட்கள் கூர்தீட்டிய முனையுடன், அவருடன் பேச தயார் செய்து சைக்கிளை மிதித்து மேலும் யோசித்தபடி சென்று கொண்டிருந்தேன். வேறு எங்காவது படகில் ஓட்டை இருக்க்கிறதா, அவரது எல்லா நகர்த்தலுக்கும் நம்மிடம் பதில் உள்ளதா , சொல்லியே ஆக வேண்டிய குறிப்பிட்ட பஞ்ச் வாக்கியங்கள் ...இவையெல்லாம். ஆபீஸ் கண்ணில் தெரியும் அந்த சிக்னலுக்கு முன்னால் இடது ஓரத்தில் இருந்தா...