சம்பக தாமா ஒன்று கூடி படிக்கவோ எழுதவோ மனம் சிதறாமல் இருக்க வேண்டும். வேலை தான் காரணம் என்று சொல்லிச் செல்லலாம். ஆனால் அதிலும் அருகிலிருக்கும் ஆட்கள் தான் காரணம். இவர்களை நம்மால் தேர்வு செய்ய முடியாது, எல்லாம் தானாக அமைவது தான். அதிலும் ஒரு சிலர் காற்று துளியே ஆனாலும் அறை முழுதும் பரவுவது போல், நம்மை முழுதும் ஆக்கிரமிக்கிறார்கள். நம்மை அறியாமல் சிந்தனை ,செயல் எல்லாம், ஆக்கிரமிக்கிறார்கள். இது நேர்மறையாய் இருந்தால் ஒன்றும் இல்லை. எதிர்மறையாய் ஆகும்போது இன்னும் சிக்கல் வருகிறது. ஒரு கட்டிடம் கட்டும் போது மண்வெட்டியும், கைக்கரண்டியும் அவசியமே. ஆனால் மண்வெட்டி கொத்துவது, கைக்கரண்டி கட்டுவது. ஒரே கொத்திக் கொண்டிருந்தால், கட்டிடம் தானாய் எழாது. ஒரு இடத்தில் கொத்துபவர்கள் நிறுத்தி விட வேண்டும். கட்டுபவர்கள் அன்று மிகுதி இருந்தால் வேலையும் ஆகிறது. ஏன் இதெல்லாம் சொல்ல வேண்டும் என்றால், இப்படி கொத்துபவர் ஒருவர் சில வாரங்கள் லீவில் இருக்கும் போது அலுவலகத்திலும் கோடை அனல் போய், வள்ளலார் சொல்வது போல் ஆகிறது. நிழலும், மலர் பூத்த தெள்ளிய ஓடை நீரும், மெல்லிய பூ...