பெங்களூர்- ஹைதராபாத் சாலையிலோ அல்லது பெங்களூர் -கிருஷ்ணகிரி சாலையிலோ இருக்கும் ஒரு பீடபூமியை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு நெடுஞ்சாலையின் மிக உயரமான மேடு தெரியும் வண்ணம் கேமரா நிற்கிறது. இப்போது மாதவன் ஒரு ஸ்ப்ளெண்டர் மோட்டார் வண்டியில் , கண்ணளவே உள்ள கறுப்புக் கண்ணாடியுடன் , நீல நிற டெனிம் சட்டை , காதுகளில் இயர் போனுடன் பிரேமுக்குள் நுழைகிறார். காதுகளுக்குள் ஒலிக்கும் இசை அவர் முகபாவங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது. உதடு இரண்டும் குவிகிறது, பின் பல் காட்டி சிரிக்கிறது. நமக்கு கேட்குமாறு என்றென்றும் புன்னகை என்று பாடல் ஒலிக்கிறது . அடிக்கடி அவர் முகம் பிரேமில் இருந்து மறைந்து மீண்டும் உள்ளே வருகிறது. கேமரா நின்ற இடத்திலே நிற்கிறது. கானல் பிம்பம் தெரிவது போல் பிசுபிசுத்து மீண்டும் தெளிவாகிறது. நடுநடுவே டைட்டில் கார்டுகள் வந்து விழுகின்றன. இது மணி ரத்தினத்தின் ஒரு படத்துவக்கம். இவ்வாறு இன்றும் நினைவுகூறும் வகையில் இருக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் கணக்கற்றவர்களின் கூட்டு உழைப்பால், மிகுந்த பொருள் செலவில் உருவாகும் ஒரு திரைப்படம், முதல் சில மணித்துளிகளில் , ஒரு ஸ்குரோல் செய்த...