உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 1 மாசனோபு புகோகா வேளாண்மையில் ஒரு சார்வாக சிந்தனையாளர். இவர் எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி என்பது மிக பிரபலமான புத்தகம். 1930 களில் தாவரவியல் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளராக (Microbiology ) வாழ்க்கையைத் தொடங்கியவர். தாவரங்களில் தாக்கும் நோய்கள் பற்றி ஆராய்ச்சி செய்வது இவர் வேலை. நாள் முழுதும் ஒரு கண்ணால் மைக்ரோஸ்கோப் வழியே பார்த்துக்கொண்டே இருப்பது. நிமோனியா காய்ச்சல் வந்து மரண விளிம்பில் இருந்து மீள்கிறார். இந்நிகழ்வு இவருக்கு மரணத்தின் முன் வாழ்க்கையின் மதிப்பெண்ண என்ற கேள்வியை எழுப்புகிறது. இடைவிடாது ஊர்களிலும் காடுகளிலும் சுற்றித் திரிந்த அந்த நாட்களில் , ஒரு இரவில் மலைச்சரிவில் மயங்கி விழுகிறார். இந்த இரவை தன் வாழ்வின் திருப்புமுனை என்று சொல்கிறார். கண் விழித்தபோது காலைக் கதிரவனின் பொன்னொளியில், வானில் ஒரு பறவை சிறகடித்து கடக்க, கீழே குப்பையில் ஒரு நெல் முளை விட்டிருப்பதைக் காண்கிறார். அவருக்கு இது ஒரு ஜென் தருணம், பெரிய திறப்பைத் தருகிறது . இயற்க்கைக்கு முன் மனிதன் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. 'ஒன்றும் செய்யாத விவசாயம்...