Skip to main content

Posts

Showing posts from December, 2023

விண்ணில் ஒரு பறவை

விண்ணில் ஒரு பறவை  நேற்று பெங்களூர் தமிழ் சங்க கட்டிடத்தில் நடந்த கவிஞர் தேவேதேவனின் ஐந்து கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு சென்றேன். தமிழ்ச் சங்க செயலாளர் பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தேன். 70 வருடங்களுக்கு மேலே சங்கம் செயல்பட்டு வருவதாகச் சொன்னார். பலருக்கு படிப்பு உதவியும் , பதிப்பு உதவிகளும் செய்து வருவதாக கூறினார். அல்சூர் அருகேயே பல வருடங்கள் இருந்தபோதும் இங்கு செல்வது எனக்கு இதுவே முதல் முறை. ஒரு சிறிய திருமண மண்டபம் போல் தோன்றியது . சுவர்களில் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் , மதுரைக் கோவில் சுந்தரேஸ்வரர் சுற்றுச்சுவர் திருவிளையாடல் ஓவியங்களை நினைவூட்டின. ஐவகை நிலங்கள் , அவற்றின் வாழ்க்கை முறை ஓவியமாய் வரையப் பட்டிருந்தது.  அபிலாஷ் தேவதேவன் கவிதைகளை அறிமுகம் செய்து பேசினார். அவர் கவிதைகளில் வரும் பறவை,வானம்,கூடு, மரம் ஆகியவை பற்றி பேசி , அவை எப்படி ஆன்மிக தளத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன என்று பேசினார். பக்திமரபின் நீட்சியாகவும்,ஆனால் ஒரு பக்தரல்லவராகவும் , மாற்றாக முழுவதும் பொருளியல் உலகில் சிக்காமலும் அவர் கவிதைகள் தனித்துத் தெரிகின்றன என்று சொன்னார். சாரு அ...

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 1

பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 1 மிகவும் பரபரப்பான, தெற்கே ஓசூரையும் பெங்களூரையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் , இன்றைய பெங்களூரின் கோட்டைவாசல் என்று சொல்லத்தக்க சில்க் போர்டு மேம்பாலம் உள்ளது. ஏன் சில்க் போர்டு கோட்டைவாசல் என்றால் பிற ஊர்களில் இருந்து (குறிப்பாக பிழைப்புத்தேடி) வருபவர்களை இங்கு இறங்கச் சொல்லி உள்ளூர்க்காரர்கள் வந்து அழைத்துப்போவார்கள்.  இதே போல் பெங்களூர் வடபுறம் ஒரு கோட்டை வாசல் உண்டு. அதன் பெயர் ஹெப்பால் மேம்பாலம் என்று பெயர். இது கிளைச்சாலைகளாகப் பிரிந்து தும்கூர் , அனந்தப்பூர், மற்றும் இன்னும் பல ஊர்கள் வழியாக, ஒருபுறம் ஆந்திராவிலும் , இன்னொருபுறம் மேலும் கர்நாடகவினுள்ளும் செல்கிறது. முடிவில்  தக்காணப் பீடபூமி முழுவதும் விரிகிறது. மூன்றாவதாக மேற்கே மைசூரையும் பெங்களூரையும் இணைக்கும் மைசூர் மேம்பாலம். இறுதியாய் , கிழக்கே திருப்பதி, சென்னையை இணைக்கும் ரோட்டின், கே ஆர் புரம் மேம்பாலம்.  ஏன் மேம்பாலம் என்பதை மையத்தில் நிறுத்திச் சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், ஏறக்குறைய வரலாற்றின் முக்கால் பங்கில்  பெங்களூரும் வரலாறு ஏறி இறங்கிச் செல்லும் மேம்பாலம...

அடுத்த மூச்சு -2 - சீ... ஓட்டம்

https://muthuvishwanathan.blogspot.com/2022/12/blog-post_28.html மெது ஓட்டம் பற்றி மேலே இருக்கும் முந்தய பதிவு எழுதியபின் , 2023 ஆரம்பத்தில் ஒரு நான்கைந்து முறை வீட்டிற்கும் கர்மேலராம் ரயில்வே பாலத்திற்கும் 10கே ஓடிப்பார்த்தேன். இது முடிவில் ஒரு மாதிரி எதிர் திசையில் முடிந்தது. விவரம் கீழே. இப்போது இன்னொரு ஒரு புதிய துவக்கம். அதன் விவரம் அதற்கும் கீழே. Nike ஆப் கோச்சுகள் காதில் பேசிக்கொண்டே வருவார்கள். நமக்கு முதல் எட்டு எடுத்தால் என்ன நடக்கும் என்று ஏற்கனவே தெரிவதால் , அறியாமலே கால் தயங்கும்.  கோச் காதில் தன் குலமுறைமைகள் எல்லாம் சொல்லி, (ஒலிம்பிக் பதக்கம் உட்பட),  'முதல் அடியே வெல்லும் அடி ; வென்றவர்கள் எல்லாம் முதல் அடி எடுத்து வைத்தவர்களே' என்பார்.  நீங்கள் ஆப்பை ஆன்  செய்து முதல் அடி எடுத்தது உங்கள் எண்ணத்தை காட்டுகிறது என்பார். நம் கால் இன்னும் நகராது. அப்புறம் நமக்குள் ஒரு பெரியவர்   'என்னப்பா இவ்வளவு சொல்றாரே..இன்னுமா விளங்கள' என்பார் . நாமே நினைக்காத ஒரு கணம் கால் நம்மை மீறிச் செல்லும். சரி ஒரு வழியாக கட்டு அவிழ்ந்தது.மெல்லிய சூடு நெற்றியில் படர ஆரம்பிக...