ஒரு சனிக்கிழமை காலை இப்போதெல்லாம் சனிக்கிழமை காலை, வாரநாட்களைவிட இன்னும் முன் எழ வேண்டியிருக்கிறது. வேறு என்ன, ஸ்ரீக்கு கால்பந்து பயிற்சி. ஐந்தே முக்காலுக்கு பள்ளியில் இருக்க வேண்டும். எலீட் கோச்சிங் என்று சொல்கிறார்கள். கிளம்புவதற்கு முன் கோச் நரம்பு புடைக்க 15 நிமிடங்கள் நின்றபடி பேசிக்கொண்டு இருந்தார். கீழே பையன்கள் பெரும்பாலும் கைகள் முட்டியை கட்டியபடி படி இருந்தனர். சிலர் நெளித்துக் கொடுத்து, அடுத்து படுக்க வழி பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் வண்டியில் திரும்பி வரும்போது, 'கோச்சு ரொம்ப நேரமா பேசினாரே , என்னப்பா சொன்னாரு ?" 'அது தியரிப்பா ' 'அதான்ப்பா என்ன சொன்னாரு ?' 'டி பிரீபிங் ப்பா' '...' 'என்ன நல்லா நடந்துச்சு , என்ன ட்ரபாக்ன்னு டிஸ்கஸ் பண்ணனும்...நான் போன மேட்சுல எல்லாரும் உயரமா ஒருத்தன பாத்து பயந்தோம்ன்னு சொன்னேன்..அதான் தோத்தோம்ன்னு சொன்னேன்...கோச் ஆமான்னு சொன்னாரு ' 'பேச்சு சரி ...நல்லா ஓடி விளையாடணும்ப்பா...இடுப்புல கை வைச்சு நடுவுல நின்னுக்கிட்டே இருக்கக் கூடாது... ' 'ஆமப்பா ...தியரிய விட ப்ராக்டிகல் த...