ஒரு தொழில்நுட்ப உரசல் தொடுதிரை என்னும் கல்பற்றா நாராயணன் கவிதை. ஒரு அப்பா டச் ஸ்கிரீன் திரையில் தடுமாறுவதையும் , அவர் பையன் நீரில் நடக்கும் கிறிஸ்துவைப்போல் தொடக்கூட இல்லாமல் திரையில் கைகளால் நடந்து செல்கிறான். அழுந்தக் கால்பதித்தே நடந்து பழகிய அவர் வாழ்வு நம் கண்முன் வருகிறது. பலமே தேவையில்லாத ஒரு வாசலின் முன் தனியனாய் வந்து நின்று இருக்கிறார். "காய்த்துப்போன விரலிருந்தும் எத்தனை அழுத்தியபோதும் செயல்படவில்லை. இது தொடுதிரை அப்பா மெல்ல தொட்டாலே போதும் அழுத்தவே வேண்டியதில்லை சொல்லப்போனால் தொடக்கூடவேண்டியதில்லை இதோ இப்படி அவன் விரல் நீரின்மேல் ஏசு போல நடந்தது அவன் விரும்பியபடி செயல்பட்டன எல்லாம் உலகம் எனக்கு வசப்படாமலிருந்தது இதனால்தானா? நான் தேவைக்குமேல் அழுத்திவிட்டேனா? " ... மேல்தளத்தில் எடையில்லாமல் நகர என்னால் இயலவில்லை முதல் அடியிலேயே நான் மூழ்கினேன் பூ விரிவதை கண்டதில்லையா செடி அழுத்துகிறதா என்ன? ஆனால் நான் பழுதடைந்த மின்விசிறிபோல ஓசையிட்டபடி மலர்ந்தேன் நெற்றி வியர்வையை கொதிக்கவைத்து என் அப்பங்களை வேகவைத்தேன் அது ஐந்தாயிரம்பேருக்கல்ல ஐந்துபேருக்கே போதவில்லை. என் ...