டி.கே .சி எழுதிய கம்பர் தரும் ராமாயணம் மேல் நோக்கி கிளை விரித்து சென்ற வண்ணம் இருக்கிறது. கம்பராமாயணத்தில் வரும் பாடல்களை இடைச்செருகல் என்று பல பாடல்களை நிராகரிக்கிறார். இவர் மேலும் தொகுத்து எழுதியது இப்புத்தகம். எனவே சொல்ல வேண்டியதில்லை, பொறுக்கி எடுத்து இருக்கிறார் , நயம் சொல்லி விரித்து எழுதி இருக்கிறார்.. கம்ப நாடகமும், கம்ப சித்திரமுமே நம்மை உள்ளிழுத்துச் செல்கிறது என நினைக்கிறேன்( டி.கே .சி ). நாடகத்தை விட கம்பர் காட்டும் சித்திரமே எனக்கு உவப்பாய் இருக்கிறது. சித்திர கூட படலத்தில் லட்சுமணன் காட்டில் குடிசை அமைக்கும் காட்சி வருகிறது. வளைவில்லாத, நேரான பக்கவாட்டு மூங்கில்களை நிறுத்தி, மேலாக குறுக்குக்கழிகளை தாளாமல் சேர்த்துக் கட்டி முடிந்தான். மேலே கூரையில் தேக்கின் இலைகளை பரப்பி, அதன் மேல் பூத்த நாணல் புற்களை வெய்து, கீழே நிறுத்திய கழிகளுக்கு இடையில் மண்ணை அடித்து , சுவர் எழுப்பி அதில் நீர் பூசி மெழுகினான். நெடுங் கழை குறுந்தறி நிறுவி, மேல் நிரைத்து, ஒடுங்கல் இல் நெடுமுகடு ஒழுக்கி, ஊழ் உற இடுங்கல் இல் கை விசித்து ...