ஒரு நேர்முகம் (புனைவு) கார் ஓட்டுவது எனக்கு மிகப் பிடித்த விஷயம். நெடுந்தூர பயணம் என்றால் ஏறியவுடன் FM ஆன் செய்து விடுவேன். ஓட்டியபடியே கூர்ந்து கேட்டுச் செல்வது எனக்கு சுகானுபவம். மிக சாதாரணமாணவர்கள், எளிய மனிதர்கள், ஏன் இந்த FM -ஐ அழைக்க வேண்டும், பேச வேண்டும். ஒருவர் சந்திரசேகர் என்பவர், ஏன் ஒவ்வொரு முறையும் அவர் குரல் கேட்கிறேன், தெரியவில்லை. எல்லா ஸ்டேஷன்களும் அல்ல , சேணம் கட்டப்பட்ட ஸ்டேஷன்களை கேட்பதுதான் எனக்குப் பிடிக்கும். சூரியன் FM போன்றவை சுவாரசியம் இல்லாதவை, TV , youtube போல் காதுக்கும் எதாவது செய்கின்றன. காலையில் ஒரு கோவில் மணி அடித்து திருக்குறள் எதாவது கேட்கலாம். இல்லை மாலை ஒரு ஏழு மணியானதும் கரகரப்பான(ஹஸ்கி) குரல் உள்ள ஒரு பெண்ணை பேச வைக்கின்றனர். இவை நமக்குப் புதிது அல்ல. பின் எல்லாம் டிவி தான் , ஆனால் கண் தேவை இல்லை. இப்போது ரேடியோ வேண்டும் என்றால், நீங்கள் அரசாங்கம் நடத்தும் சேனல்களை கேட்க வேண்டும். இவர்கள் தான் சற்று இன்னும் உறைந்து, திகைத்து இருக்கிறார்கள். இங்குதான் எதோ ஒன்று நீங்கள் ஜன்னலைத் திறந்ததும் பார்க்கும் சூரியன் இல்லை காற்று போல் ...