பூமணியின் அஞ்ஞாடியில் வந்த தென் மாவட்டங்களின் வரலாற்றுச் சித்திரம் என்னை மதுரையைப் பற்றி இன்னும் படிக்கச் செய்தது. கடந்த ஒரு மாத காலமாக படித்த, கீழே வரும் வரலாற்று புனைவு நூல்களின் collage என்றுதான் இப்பத்தியைச் சொல்ல வேண்டும். தகவல் போல சொல்லப்படும் வரலாறு எப்போதுமே என் ஆர்வத்தைத் தூண்டுவதில்லை. ஒரு சங்கிலித் தொடர் போல் வரலாற்றை கதைகளாய் வாசிப்பது இனிய அனுபவமாய் இருக்கிறது. வழி மதுரை என்று போர்டு போட்டு வரும் பேருந்து ஊரெல்லாம் செல்வது போல் தான் இதுவும். கிழக்கு கோபுரம் மஹால் ராயர் கோபுரம் , பாதியில் நிற்பது புதுமண்டபம் கோட்டை முகப்பு, இன்றைய அரசு மருத்துவமனை இருக்கும் இடம் விளக்குத் தூண் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் ஒன்றில் ஒரு வரியாய் வருவது, இன்னொருவரால் மிக விரித்து சொல்லப்படுகிறது. கணவன் இறந்ததும் உடனே சாவதும் , மன்னர்கள் படையெடுப்பின் விளிம்பில் மொத்த அந்தப்புரத்தையும் வெடியால் தகர்ப்பதும் மிக எளிதாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. ஆனால் தானே உயிரை மாய்ப்பது என்பது எவ்வளவு பெரிய தருணம். தாஸ்தாவெஸ்கி சைபீரிய முகாமில் அ...