பெங்களுரு கட்டண உரை - கூட்டத்துடன் தனித்திருத்தல் https://www.jeyamohan.in/பெங்களூரு-கட்டண-உரை-ஜனவ/ முதல் முறையாக கட்டண உரையைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. இதைப் பற்றி தங்கள் தளத்தில் கடிதங்கள் படித்திருக்கிறேன். இப்போது இதை இங்கே மொத்தமாக தொகுத்துக் கொள்கிறேன். மிக மிக அடர்த்தியான உரை, ஜெயமோகன் கொடுத்த மேற்கோள்களையும் , புத்தகங்களையும் இனிமேல் தான் படிக்க வேண்டும். பகுதி 1: நாம் இங்கே புது சிந்தனைகளை எவ்வாறு உருவாக்குவது, ஏன் இப்போது உருவாக்கமுடிவதில்லை, ஏன் மேற்கத்திய சிந்தனை புதியதை உருவாக்குகிறது என்பது முதல் பகுதி உரையின் சுருக்கம். எடுத்துக்காட்டாக ஆத்மா/soul மற்றும் பிரக்ஞை/consciousness என்ற இரு சொற்களை எடுத்து ஐரோப்பிய சிந்தனை முறையை , அதில் மெட்டாபிசிக்ஸ்(மீபொருண்மை) வெளியேறியதை விளக்கினார். ஆத்மா என்பது ஒரு கற்பனை,மூட நம்பிக்கை, நிரூபணம் இல்லாதது. இது soul /existence என்று ஒரு ஐரோப்பிய மனம் மொழி பெயர்ப்பதினால் வருவது . இங்கே ஆத்மா ஒரு உருவகம், existence இல்லை. Logical positivism, pragmaticism , objectivism - புறவயவாதம் இவை யாவும் ஐரோப்பிய ...