விண்ணில் ஒரு பறவை நேற்று பெங்களூர் தமிழ் சங்க கட்டிடத்தில் நடந்த கவிஞர் தேவேதேவனின் ஐந்து கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு சென்றேன். தமிழ்ச் சங்க செயலாளர் பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தேன். 70 வருடங்களுக்கு மேலே சங்கம் செயல்பட்டு வருவதாகச் சொன்னார். பலருக்கு படிப்பு உதவியும் , பதிப்பு உதவிகளும் செய்து வருவதாக கூறினார். அல்சூர் அருகேயே பல வருடங்கள் இருந்தபோதும் இங்கு செல்வது எனக்கு இதுவே முதல் முறை. ஒரு சிறிய திருமண மண்டபம் போல் தோன்றியது . சுவர்களில் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் , மதுரைக் கோவில் சுந்தரேஸ்வரர் சுற்றுச்சுவர் திருவிளையாடல் ஓவியங்களை நினைவூட்டின. ஐவகை நிலங்கள் , அவற்றின் வாழ்க்கை முறை ஓவியமாய் வரையப் பட்டிருந்தது. அபிலாஷ் தேவதேவன் கவிதைகளை அறிமுகம் செய்து பேசினார். அவர் கவிதைகளில் வரும் பறவை,வானம்,கூடு, மரம் ஆகியவை பற்றி பேசி , அவை எப்படி ஆன்மிக தளத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன என்று பேசினார். பக்திமரபின் நீட்சியாகவும்,ஆனால் ஒரு பக்தரல்லவராகவும் , மாற்றாக முழுவதும் பொருளியல் உலகில் சிக்காமலும் அவர் கவிதைகள் தனித்துத் தெரிகின்றன என்று சொன்னார். சாரு அ...