Skip to main content

Posts

Showing posts from December, 2022

ஒரு கேள்வியும் பதிலும் , ஒரு சிறுகதையும்

அறிவின் விளைவா உறுதிப்பாடு? சில தினங்களுக்கு முன்னர் ஜெயமோகன் தளத்தில் வெளியான இந்த கேள்வி - பதில் எனக்கு மிக முக்கியமாகப் பட்டது. இதற்க்கு முன் இதே கருத்தை பலமுறை ஜெமோ சொல்லியிருந்தாலும், இந்த முறை இதைத் தொகுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். கேள்வியின் சுருக்கம்:  1) நம்முடைய இறப்பை எவ்வாறு எதிர் கொள்வது ?  2) நெருங்கியவர்களின் இழப்பை எப்படி எதிர் கொள்வது? பதிலின் தொகுப்பு: -இது ஒரு அடிப்படைக் கேள்வி. அடிப்படைக் கேள்விகளை இரண்டு வகையாக எதிர் கொள்ளலாம்.   1. தன் அனுபவ வழி. இது உங்கள் வழி. இதை நிரூபிக்கவோ , விளக்கவோ வேண்டியதில்லை. நீங்களே மேலும் தேடி கண்டடைய வேண்டும்.   2. தத்துவார்த்தமான வழியில் எதிர் கொள்ளல். அஅதாவது இதற்கு முன் தத்துவங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. இதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது.       -இதற்க்கு நம் மரபில் சொல்லப் பட்டிருக்கும் வழி. இன்ப துன்பங்களில் சமநிலையோடு வாழ்வது. இதை ஸ்திதப்ரஞன்(ஒரு மனதோடு நெறியில் நின்று வாழ்பவன்,  ) என்று சொல்கிறார்.     -மேலிருக்கும் இந்த தத்துவத்தை, அதில் உள்ள விழுமியங்கள...

அடுத்த மூச்சு -1

விளையாட்டுப் போக்காக Nike Run Club (NRC ) -app ஐ , என்ன இருக்கிறது பார்ப்போம் என்று தரவிறக்கம் செய்தேன். முழுவதும் அப்பிக் கொண்டது. ஓடும் போது பயிற்சியாளர்கள் காதில் பேசுகிறார்கள். ரொம்ப எளிதாக நம்மை ஸ்ட்ரெட்ச் செய்கிறார்கள். ஒரு சவால் தான் , எனக்கும் நன்றாக தான் இருந்தது. நீங்களும் முயற்சிக்கலாம். தெரியாமல் இன்னும் ஒன்றைச் செய்து விட்டேன். ஒரு 21 கீ மீ ஓட்ட டரில்லை ஆரம்பித்தேன். 14 வாரம்,  இப்போது ஐந்திலேயே கஷ்டம் தெரிகிறது. இந்த வாரம் 12.8 கீ . மீ எதிரில் இருக்கிறது. இது ஒரு தன்னை ஆற்றும் முயற்சியே. முதலில் வலியைப் பற்றி எனக்கு தெரிந்ததை இங்கு  சொல்லியாக வேண்டும். வலி என்னும் பரிசு , Pain : Gift Nobody Wants என்னும் புத்தகத்தை பால் ப்ராண்ட் என்பவர் எழுதியிருக்கிறார். இவர் ஒரு அறுவைசிகிச்சை மருத்துவர். இவர் கதையே தனியாக எழுத வேண்டுவது.  இவர் தன் வாழ்வு முழுதும் வலி பற்றியே ஆராய்ச்சி செய்திருக்கிறார். அவரது வாழ்வின் முடிவில்  எழுதியதுதான் இந்த புத்தகம். அவர் வாழ்க்கை, ஆளுமை இந்த momoirs வழியாக மிகப் பெரிதாக விரிவதைக் காண முடியும்.  பால் ப்ராண்ட் 1914ல் தமிழ...

போக புத்தகம் - போகன் சங்கர் - புத்தக வாசிப்பு

Boga Puththagam (Tamil)  https://tamil.wiki/wiki/போகன்_சங்கர் மிகச் சாதாரணமாக, அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டே  இருக்கக்  கூடிய , அல்லது பார்த்து விட்டு எளிதாக கடந்து சென்ற விஷயங்களில் இருந்து  ஒரு கதையை தேர்ந்த படைப்பாளியால் உருவாக்க முடியும் . “Genius is seeing what everyone else sees and thinking what no-one else has thought.” போகன் சங்கரின் இந்த எழுத்துக்களில் பல இடங்களில் இது நிகழ்கிறது.  நமக்கு மிக அருகில் இருக்கும் மனிதர்களே வருகிறார்கள். கூடே வேலை பார்ப்பவர்கள், யோகா வகுப்பு படித்தவர்கள், ஆசான் ,பக்கத்துக்கு வீடுகளில் வசித்தவர்கள், நண்பர்களின் வீட்டு மனிதர்கள், பேருந்தில், ரயிலில் உடன் வருபவர்கள்   - எத்தனை மனிதர்கள், எத்தனை கதைகள். ஆசிரியர் ஒரு சிறந்த கதை சொல்லி. கணக்கில்லாத அக்காக்களும் , தோழிகளும் கதையெங்கிலும் வருகிறார்கள். எனக்கு கோபல்ல கிராமம் படித்த ஞாபகம் வந்தது. இதே போல் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து கதைகளும். எல்லாக் கதைகளும் குதூகலத்துடன், சிரித்தபடி படிக்க வைக்கும் கதைகள்.  நான் ரசித்த சில கதைகளை கீழே தொகுத்திருக்கிறேன். கடல்புரத்தில...

இன்று நீ , நாளை நான்...

இரு சக்கர வாகனம் இருபது வருடம் ஓட்டிக்கொண்டு இருப்பவரிடம் லைசென்ஸ் இல்லை என்றால் நம்ப மாட்டீர்கள். நான் பார்த்து குழந்தையாய் இருந்த , இன்று பதின்மராய் உள்ள ஓரிருவர் லைசென்ஸ் எடுத்திருக்கிறார்கள், ஆனால் இன்னும் வண்டி பழக வேண்டும்.  பரவாயில்லை என்று சொல்லக்கூடாது தான்.  இது ஒரு deterrance  (தடை) தான். இது போக நம் வண்டி 30-40 க்கு மேல் செல்லாது, வண்டிக்கும்  4-5 கி மீ சுற்றளவின் உள்ளேதான் உபயோகம் - பால் , தயிர் , வீட்டில் போரடிக்கும் போது தோழனாய் உடன் வருவது . லைசென்ஸ் எடுப்பது இன்னும் கணக்கற்ற, செய்ய வேண்டிய, பெருகிக் கொண்டிருக்கும் செயல்களில் ஒன்றாய்  உள்ளது. டிராபிக் போலீஸ் - இல்லை - டிராபிக் இன்ஸ்பெக்டர் எப்போது எங்கு இருக்கலாம் என்று எளிதாக சொல்லிவிட முடியும். போலீசுக்கு பைன் வாங்கும் அதிகாரம் கிடையாது. கேஸ் புக் செய்யலாம் .இன்ஸ்பெக்டருக்கே இந்த அதிகாரம் உண்டு. இவர் தன் படை பரிவாரங்களுடன் நின்று வசூல் செய்வதை பார்த்திருப்பீர்கள். இவர் நின்று வசூல் செய்யும் இடங்களுக்குக்கான ஒரு மேப் உள்ளது. சில மேம்பாலங்களின்  அடியில், நோ-free left தாண்...

சக்கை துவரன்

இன்று காலையில் கொஞ்ச நேரம் க.நா.சு பற்றி தமிழ் விக்கியில் படிக்கப் போய்(  க.நா.சுப்ரமணியம், தமிழ் விக்கி ), லிங்குகளின் வழியாக பாரதி மணி(க.நா.சு வின் மருமகன், பாரதி படத்தில் அப்பாவாக வருபவர்) எழுத்துக்களை சிறிது படித்து பின்னர் துவரனில் போய் முடிந்தது. க.நா.சு வுக்கு  டில்லியில் ஒரு கவிஞர் பழக்கம்  (ஹிந்திக்கவிஞர் ஹரிவன்ஸ் ராய் பச்சன்). ஒரு நாள் சந்திப்பில் இடையில் மகன் வருகிறார். பின்வரும் வரிகள் பாரதி மணி எழுதியது.  கவிஞர் இவரிடம் ‘ KaNaa, He is my son Amitabh ‘என்று அறிமுகப்படுத்தினார். கநாசு அமிதாப் பச்சனிடம்,   What are you doing?   என்று கேட்டார். அதற்கு   அமிதாப்   பணிவாக ’   I am in the Film industry ’ என்று பதிலளித்தார். அதில் திருப்தியடையாத கநாசு கேட்ட அடுத்த கேள்வி:   Writing songs like your Father? அமிதாப்  இன்னும் பணிவாக   No, I am an Actor   என்று பதிலளித்தார். பத்திரிகைகளுக்கு பலவருடங்கள் பேட்டியே கொடுக்காத அமிதாப் பச்சன் முதல் தடவையாக  பம்பாய்  ஃ பிலிம்பேர்  பத்திரிகைக்கு கொடுத்த நீண்ட நேர்க...

சைக்கிள் பதிவுகள் -2 - ஒரு சிறிய கணக்கு & ஒரு உரசல்

ஒரு சிறிய கணக்கு: வீட்டில் இருந்து ஆபீஸ் செல்லக் கடக்க வேண்டிய சிக்னல்கள் : 17 சிக்னல்கள் பெரும்பாலும் auto mode-ல் ஓடுகின்றன. டிராபிக் போலீஸ் அவரே இயங்கச் செய்தால் டிராபிக் கிழிந்தது என்று அர்த்தம். ஆகவே இதை விட்டு விடலாம். இந்த கணக்குக்காக ஆட்டோ மோட் என்று வைத்துக் கொள்வோம். ஆட்டோ மோட் சிக்னல் இயங்கும் விதத்தை இவ்வாறு கூறலாம். 24 மணி நேரத்தை 8 கூறாக பிரிக்கிறார்கள். இரவு 12லிருந்து 7 மணி வரை சிக்னல் கிடையாது. 1) 7-8 2) 8-11 3) 11-5 4) 5-6 5) 6-9 6) 9-10:30  7)10:30 - 11:30 8) 11:30 - 12:00 ஜங்ஷன்-ஐப் பொறுத்து ட்ராபிக்கை 4 அல்லது 5 கட்டமாக  (phase) பிரித்து இருக்கிறார்கள். இதை ஒரு திசையில் வண்டியில் உள்ளவர் ரோட்டைக் கடக்கும் வாய்ப்பு எனலாம்.  நடப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு. இந்த ஒரு வாய்ப்பு காலை 9 மணியில் இருந்து இரவு  9 மணிக்குள் கடந்தால் 40 - 60 நொடிகள் (பச்சை விளக்கு). அடுத்த வாய்ப்பு அடுத்த 3 லிருந்து 4 நிமிடங்கள் கழித்து. அதாவது சிகப்பு விழுந்த பின் காத்திருப்பு,  cycle time என்பது. சாம்பிளுக்கு ஒன்று கீழே. https://data.opencity.in/dataset/bengalu...

ஒரு ஆன்லைன் மீட்டிங்

எல்லா நாளுமே இரவு மீட்டிங்குகள் இருக்கும் . சில  நாள் ஒன்றுடன் முடியும்.சில நாட்களில் 3 அல்லது நான்கு மீட்டிங்குகள் கூட இருக்கும். முடியும் போது நள்ளிரவு ஆகி விடும். நாள் துவங்கியதுமே அந்த  நாள் எத்தனை மணிக்கு முடியும், இந்த நாள் அடுத்த நாளை எவ்வாறு நசுக்கும் என்று பார்த்து சந்தோஷமோ , அதிருப்தியோ அடைவது என் வழக்கம். அலுவலகம் திறந்த பின் இது இன்னும் சிக்கல் தான், ராத்திரி லேட் என்பது அடுத்த நாளின் ஆரம்பம் லேட்டாகலாம் என அர்த்தமாகாது .  இந்த வகையான மீட்டிங்குகள் பெரும்பாலும் ritual-கள் தான். ஒரு சில டெம்ப்ளட்க்களுக்குள் அடக்கி விடலாம். Goldratt -ல் படித்த இந்த வரிகள் தான் எனக்கு அடிக்கடி நினைவில் வரும். “Tell me how you measure me and I will tell you how I will behave. If you measure me in an illogical way… do not complain about illogical behavior…” நான் பார்த்து எல்லா கம்பெனிகளிலும் பெரும்பாலும் எல்லா மீட்டிங்குகளும் 90% நேரம் defects (குறைபாடுகள்)  சுற்றியே இருக்கும். எத்தனை மொத்தம், எத்தனை வரவு, எத்தனை வெளியேறியது ,யார் பேரில் உள்ளது, யார் கீழே போட்டு மேலேறி உட்கார்...

வாசிப்பது எப்படி - செல்வேந்திரன் - நூல் பதிவு

vasippathu eppadi/வாசிப்பது எப்படி?  நாம் பொதுவாக புத்தகங்களைப் படிப்பது என்பது 'ஒரு' புத்தகத்தை எவ்வாறு படித்து புரிந்து கொள்வது என்று எண்ணி கொண்டிருக்கிறோம். ஆனால் என்னைப் பொறுத்தவரை வாசித்தல் என்பது ஒரு process - செயல் முறை ஆகும். இதை செய்து பார்த்து , படித்துப் பார்த்து, பேசிப் பார்த்து  refine செய்து கொள்ளலாம் என்பது இந்தப் புத்தகத்தில் இருந்து நான் புரிந்து கொண்டது.  முக்கியமாய் syllabus, வேலைப்  புத்தகங்களுக்கு மேல் ஏன் படிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆசிரியர் கல்லூரி மாணவர்களையும் இளம் வாசகர்களையும் இலக்கியத்திற்குள் ஏன் வர வேண்டும் என்று படிப்படியாக விளக்குகிறார். compelling ஆக இருக்கிறது. ஒரே அமர்வில் படித்து முடித்தேன். புத்தகத்தை கையில் வைத்துள்ள ஒருவரை போலீஸ் சந்தேகிப்பதில்லை என்கிறார். இது உண்மை என்றே நினைக்கிறேன்.இவர் செல்லும் பேருந்தில் இவருக்காக லைட்டை இரவில் எரிய விடும் ஓட்டுநர் இருக்கிறார். ஒரு நல்ல சூழியல் புத்தகம் படித்தவர் பீர் போத்தலை காட்டில் உடைக்க மாட்டார் என்கிறார். ஜெயலலிதாவுக்கும் செம்மீன் கதாநாயகிக்கும்(ஷீலா ) உள்ள வித்தியாசம் வாச...

அந்த 48 நாட்கள்

இன்று இவ்வாறு ஒரு சனிக்கிழமையில் இவ்வளவு வசதியாக வேலையெல்லாம் ஒதுக்கி வைத்து (பில் கட்டுதல்,பெயர் மாற்றுதல் இன்ன பிற  ), காலை காபி குடித்தபின் இந்த ஒரு அழகான சுய புராணத்தை டைப்  செய்வேன் என்று நீங்கள் சொல்லியிருந்தால் , 25 வருடங்களுக்கு முன் நானே நம்பியிருக்க மாட்டேன்.  எனக்கு 1997-ல் பி.எஸ்சி படித்து முடித்தவுடன் வேலை பார்க்க வேண்டும் என்ற ஒரே குறிதான்இருந்தது. பாதிக்கும் மேல் நண்பர்கள் மேல் படிப்பையே தேர்ந்து எடுத்தார்கள். பேப்பரை பார்த்து காத்து இருப்பார்கள். என்றாவது ஒரு நாள் அட்மிஷன் அழைப்பு வரும். கல்லூரியை பொறுத்து இது முதல் பக்கமா , obituary , classified பக்கத்திலோ இருக்கும்.அதை பார்த்து DD எடுத்து அனுப்பினால் அவர்கள் அப்பிளிகேஷன் அனுப்புவார்கள். இவர்கள் ஒன்றாய் கூடி பூர்த்திசெய்த வண்ணம் இருப்பார்கள். செமஸ்டர் வரிசையாக மார்க் எழுத வேண்டும். நடக்கும் கடைசி செமஸ்ட்டரை என்ன செய்வது என்பது தான் FAQ.  என் நினைப்பு வேலை நோக்கி ஏன் சென்றது என்று இன்று யோசித்தால் ஒரே காரணம் over confidence ஆக மட்டுமே இருக்க முடியும். இந்த அதீத நம்பிக்கை எங்கு இருந்து வந்தது என்று பார...

பெங்களூர் இலக்கியவிழா, மொழி -கடிதம்

  பெங்களூர் இலக்கியவிழா, மொழி -கடிதம் December 6, 2022 அன்புள்ள ஜெயமோகன், தங்கள் தளத்தில் நீங்கள் பெங்களூர் இலக்கிய விழாவிற்கு வருவதாக வெளியானவுடன், கண்டிப்பாக இந்த தடவை தயக்கங்களை மீறி எப்படியாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். நான் இங்கு கணிப்பொறி துறையில் (ஆப்பிள் நிறுவனத்தில்) பணி புரிகிறேன். உங்கள் எழுத்துக்களையும், தளத்தையும் கடந்த பதினைந்து  வருடங்களுக்கும் மேலாக நாள் விடாமல் படித்து வருகிறேன். என்னுடைய புத்தக சேகரிப்பில் பாதிக்கு மேல் நீங்கள் எழுதிய புத்தகங்களே உள்ளன. அல்லது நீங்கள் எங்காவது குறிப்பிட்ட வேறு புத்தகமாவே இருக்கும். உங்கள் புத்தகங்கள் இல்லாமல் என் வேலையையோ, வாழ்க்கையையோ இப்போது இருக்கும் ஒரு தெளிவுடன் எதிர் கொண்டிருக்க முடியாது. நன்றி சார். தங்களை இன்று நேரில் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. என் பையன், பெண், மனைவியையும் தங்களைப் பார்க்க கூட்டி வந்திருந்தேன். அவர்கள் எல்லோருக்கும் உங்களை நேரில் சந்தித்தது மிக மகிழ்ச்சி. குறிப்பாக நீங்கள் பேசி முடிந்தவுடன், எல்லோருக்கும் பொறுமையாக மகிழ்வுடன் கையெழுத்திட்டத்தையும்,  அரை மணி நேரத்திற...

பூக்கள் பூக்கும் தருணம்

பூக்கள் பூக்கும் தருணம்  ஸ்ரீக்கு இப்போது ஒன்பது வயதாகிறது. ஒரு சில வருடம் முன் இவன் உடலுக்கும் என் உடலுக்கும் வித்தியாசமே இல்லாமல் ஒட்டியே இருப்பான். நான் வீட்டில் ஒரு இடம் இருந்து இன்னோரு இடத்திற்கு போன் பேச போனாலோ கூடவே வருவான். மீட்டிங்குகளுக்கு நடுவே நிச்சயம் ஓரிரு முறை கதவு திறந்து வருவான். மீட்டிங்கில் இருப்பது யார் என்று கேட்பான். mute -ல் இருக்கிறேனா என்று கேட்பான்.  எப்படியும் நாளுக்கு சிலமுறை தலைக்கு மேல் தூக்கி விர்ரென்று கீழே இறக்கச் சொல்லி சிரிப்பான்.வண்டிச் சாவியை எடுக்கும் சப்தம் கேட்டாலே உள்ளிருந்து வெளியே வந்து 'கடைக்கா ? நானும் வரேன், ஒன்னும் கேக்க மாட்டேன் ' என்பான். 'வண்டில போல, நடந்து போறேன்' என்றால் , 'பரவால்ல நானும் சும்மா வரேன்' என்பான். நான் அவன் தோளில் கைபோட்டவாறு நடப்பேன். பதிலுக்கு அவனும்  ஒரு மாதிரி எனது தோளைப் பிடித்து ,இறக்கி, வளைத்து கஷ்டப்பட்டு, என்னையும் கஷ்டப்படுத்தி வளைந்தவாறு என் தோள் மேல் கை போட்டு நடந்து வருவான். அன்று அவனுக்கு ஒரு பிரிண்ட்-அவுட் கடைசி நேரத்தில் எடுக்க வேண்டி இருந்தது, ஆனால் ஒரு சிக்கல். இதற்க்கு முன் ஒரு ...

சைக்கிள் பதிவுகள் -1

நான் பள்ளி செல்லும் பருவத்தில் எங்கள் ஊரின்  ஒரு ஆசிரியர் தினமும் ராஜபாளையம் டவுனில் இருக்கும் Board High ஸ்கூலுக்கு சைக்கிள் ஓட்டியே வேலைக்குச் செல்வார். மிகப் பின்னர் தான் அவர் பி.டீ ஆசிரியர் என்று தெரிந்தது.அப்போது அவருக்கு 45-50 வயது இருந்திருக்கலாம்.அவர் நான் படித்த பள்ளிக்கூடத்தையும் தாண்டிச் செல்ல வேண்டும். போய்வர 24 கிலோமீட்டர். நான் அவர் செல்வதை என் பள்ளி பேருந்தில் இருந்து பல முறை பார்த்திருக்கிறேன். கருப்பு frame உள்ள வெகு தடித்த கண்ணாடி அணிந்து இருப்பார். அதை விட தடித்த lens இருக்கவே முடியாது, உள்ளிருக்கும் கண்கள் கண்ணாடி வழியாக காலை நேர பனி போல் தெரியும்.  திரண்டு வலிமையான கைகளால் handle bar -ஐ இறுக்கிப் பிடித்து , மிகவும் குனிந்து,வேகமாக ஓட்டுவார். பஸ் சைடு வாங்கி சென்று இருக்கும். அடுத்த ஸ்டாப்பில் பஸ் நின்று குழந்தைகளை ஏற்றும் போது பெல் அடித்து பஸ்சை சைடு வாங்கி விடுவார். விடாமல் போட்டி போடுவார்.  ஆனால் அவர் இல்லாத போது அவர் சைக்கிள் விடுவதை எல்லோரும் கதைகளாகச் சொல்லிச் சிரிப்பார்கள். அவருக்கு நான்கு பெண் குழந்தைகள்.ஒரு நாள் அவர் தன் மகளை பின்னால...