கல்பொரு சிறுநுரை - வெண்முரசு நாவல் 25 - நூல் பதிவு இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து பின் இன்னொரு நாவலையும் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. சிவராம காரந்த் எழுதி சிவலிங்கையா தமிழ் மொழி பெயர்ப்பில் வெளி வந்துள்ள அழிந்த பிறகு என்னும் நாவல்.( https://ia802706.us.archive.org/11/items/AzhinthaPiraguKaranth/Azhintha-Piragu-Karanth.pdf ) காரந்த் எதேச்சையாக யசவந்தர் என்னும் பின்னாளில் நெருக்கமா நண்பராகப்போகும் சக பயணியை ரயிலில் சந்திக்கிறார்.இக்கதை எழுத்தாளர் காரந்த் அவர்களின் பார்வையிலே சொல்லப்படுகிறது. இவ்வாறு ரயிலில் அரைநாள் பார்த்து பின் அதிக பட்சம் ஆண்டுக்கொருமுறை சந்தித்த ஒருவரின் மேல் பற்று வளர்ந்து ஒரு நாவலே எழுதியது ஆச்சர்யமாய் இருக்கிறது. யசவந்தர் தான் இறப்பதற்குள் காரந்தை சந்தித்து தன் உயிலையும் பணத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்க நினைக்கிறார். ஆனால் இறந்து விடுகிறார். காரந்திடம் தன்னுடைய 15000 ரூபாயும், குறிப்பிடும் மூன்று பேருக்கு கடைசிவரை மாதம் 25 ரூ அனுப்பும் பொறுப்பையும் எழுதி வைத்து விட்டு இறக்கிறார். தான் உச...