Why We Sleep - Matthew Walker - சில குறிப்புகள் சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் 6 மணி நேர தூக்கமும் தேவை இல்லை என்றும் , தாம் மூன்று மணி நேரமே தூங்குவதாகச் சொல்லக் கேட்டேன்.நானும் இவ்வாறே நினைத்து கொண்டிருந்தேன் .தூக்கம் என்பது அவ்வளவு முக்கியம் இல்லை. அது நம்மைத் தேடிக் கண்டடையும் . இதை பற்றி பெரிய கவலை இல்லாமல் இருப்பதே நாம் செய்ய வேண்டியது. ஆனால் சரியான தூக்கம் இல்லாத நாட்களில் கண் இமைகள் தூங்கும் வரை வலிப்பதையும் , எழுத்துகள் சற்று தெளிவில்லாமல் இருப்பதையும் உணர்கிறேன். முன்னை விட இப்போது ஆள், ஊர் பெயர்கள் வேண்டும் போது நினைவில் வருவதில்லை. இந்நிலையில் கடந்த வாரம் crossword புத்தகக் கடையில் இப்புத்தகம் காண நேர்ந்தது. Mathew Walker நரம்பியல் விஞ்ஞானி , தூக்கத்தைப் பற்றி 20 வருடங்களாக ஆராய்ந்து வருபவர், பேசி வருபவர். இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் வாழ்கிறார். இனி புத்தகத்தைப் பற்றி... இந்திய ஆன்மிக அறிதலின் உச்சம் என்று அத்வைதத்தையே பலரும் சொல்வார்கள். அதன் சாராம்சம் என்பது ஆழ்ந்த தூக்கத்தை (சுஷுப்தி) உயர்ந்த அனுபவமாக்கி , விழித்திருப்பதை(ஜாக்ரத்) பிறழ்வு நிலை எ...