கல்வி இன்று இது எனக்கு வித்தியாசமாகப் பட்டது. இவர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து பிச்சை எடுக்கிறார்கள். இருவருக்கும் பொதுவாக ஒரே திருவோடு . நாலைந்து பேர் கும்பலில் இளையவர் வயதானவரை 'அந்த அய்யாகிட்ட கேளு' என்றார் , தான் ஒருவரிடம் கேட்டார். கிடைத்ததை வாங்கி இளையவர் வைத்து கொண்டார். அடுத்த இருவரிடம் வயதானவர் கேட்டு கிடைக்காமல் போனதும் ' நல்ல சத்தமா கேக்கணும் என்றார்' இளையவர். அடுத்து நின்ற ஆட்டோகாரரை பார்த்து அவர் கொடுக்க மாட்டார் என்றார் . இவர் எதுக்கும் கேட்டு பாரு என்றார். அவர் கொடுத்து விட்டார். நான் இருவரையும் பார்க்காமல் நின்றிருந்தேன். என்னைப் பார்த்து அவரெல்லாம் தர மாட்டார் என்றார் முதியவர். அவரை என்னை நோக்கிப் போகச் செய்தார் இளையவர் . சில்லறை இல்லையே என்று சொல்லி கொண்டே பின் பையில் இருந்த இரண்டு ரூ காயினை கொடுத்தேன். கொஞ்சமும் திருப்தி இல்லாதவராக முதியவர் இளையவரை பார்த்தார் . இளையவர் என் ரூவாயை திருவோட்டில் வாங்கியவாறு ' நமச்சிவாய ! நன்றி சாமி , பரவால்ல மிச்சத்த நாளைக்கு கொடுங்க ' என்றவாறு ம...