அறிவின் விளைவா உறுதிப்பாடு? சில தினங்களுக்கு முன்னர் ஜெயமோகன் தளத்தில் வெளியான இந்த கேள்வி - பதில் எனக்கு மிக முக்கியமாகப் பட்டது. இதற்க்கு முன் இதே கருத்தை பலமுறை ஜெமோ சொல்லியிருந்தாலும், இந்த முறை இதைத் தொகுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். கேள்வியின் சுருக்கம்: 1) நம்முடைய இறப்பை எவ்வாறு எதிர் கொள்வது ? 2) நெருங்கியவர்களின் இழப்பை எப்படி எதிர் கொள்வது? பதிலின் தொகுப்பு: -இது ஒரு அடிப்படைக் கேள்வி. அடிப்படைக் கேள்விகளை இரண்டு வகையாக எதிர் கொள்ளலாம். 1. தன் அனுபவ வழி. இது உங்கள் வழி. இதை நிரூபிக்கவோ , விளக்கவோ வேண்டியதில்லை. நீங்களே மேலும் தேடி கண்டடைய வேண்டும். 2. தத்துவார்த்தமான வழியில் எதிர் கொள்ளல். அஅதாவது இதற்கு முன் தத்துவங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. இதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது. -இதற்க்கு நம் மரபில் சொல்லப் பட்டிருக்கும் வழி. இன்ப துன்பங்களில் சமநிலையோடு வாழ்வது. இதை ஸ்திதப்ரஞன்(ஒரு மனதோடு நெறியில் நின்று வாழ்பவன், ) என்று சொல்கிறார். -மேலிருக்கும் இந்த தத்துவத்தை, அதில் உள்ள விழுமியங்கள...