சில கவிதைகள் Potholes ========= எங்கும் இல்லாத குண்டும் குழியுமான நீளமான சாலையில் பல கார்களைப் பின் தொடர்ந்து செல்கிறேன் நேற்று நடை வந்த குழந்தையாய் ஒரு கால் தரையிலும் மறு கால் காற்றிலுமாய் ஒரே சத்தமும் கும்மாளமுமாய் எதிரும் புதிருமாய் தத்தித் தாவி வீதியில் அசைந்தாடிச் செல்கின்றன ஒரு ரவுடிக் குழந்தையாய் டேங்கர் லாரி எல்லோரையும் முந்தியவாறே 'க்ளக் க்ளக்' என வழியெல்லாம் நீரை எல்லோர் மேலேயும் பீச்சியடித்துக் கடந்து செல்கிறது உள்ளே இருக்கும் டிரைவர்கள் பெற்றவர்களாய் பல் கடித்துப் பார்க்கிறார்கள் ஒற்றைத் தாமரை ============== இந்தப் புதுக் குடியிருப்பில் தனித் தாமரையாய் அவள் தனிமை என்கிறாள் ஏகாந்தம் என்று சொல்லி தப்பித்துப் போகிறேன் தணலும் நீரும் ========== ஓரிரு நாளாய் உள்ளே தணலும் வெளியே குளிருமாய் இவ்வுடல் வழியெங்கும் கனலாய் எரியும் தாமிர இலைகள் அதன் மடியைப் பற்றி விழா...
ஓரிரு எண்ணங்கள் - Muthu Vishwanathan